அதேபோல, வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், வீடு வீடாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக. கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு, நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப நிலை பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று விசாரணை செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைக்கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்ரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் வீடு வீடாக கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சாலைகளில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேயிலை தோட்டப் பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெறும் என்று நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.