சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்திய தனியார் நிறுவன உரிமையாளர் சுரேஷ், முக்கிய சாட்சியான எஸ்டேட் காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை.
கோவை: கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கில், ஒரே நாளில் 4 பேரிடம் ஐ.ஜி., தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017 ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்திய தனியார் நிறுவன உரிமையாளர் சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம், நேற்றும் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. ஜாமினில் உள்ள, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம், ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு, நேற்று காலை, 11:30 மணிக்கு துவங்கிய விசாரணை நேற்றிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,
இந்த வழக்கில் கூடுதல் தகவல் பெற, அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் தாக்கல் செய்த மனுவை அடுத்து, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் அளித்து வழக்கை, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதுவரை, 31 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
மேலும், முக்கிய சாட்சியான, எஸ்டேட் காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த நேபாளத்திலிருந்து அழைத்து வர உள்ளோம். இது போன்ற பல்வேறு சிரமங்களால், மறு விசாரணைக்கான கால அவகாசத்தை மீண்டும் கேட்க உள்ளோம், என்றனர்.