கோவையில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் - முறையீட்டுக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

மேலும், விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் உயிர் இழப்புகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


கோவை: மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற முறையீட்டுக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் இன்று இணையதள வழியாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, பன்னிமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சிறுமுகை, காரமடை போன்ற இடங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் மூலம் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலங்குகளால் பயிர் சேதமும், உயிர் சேதமும் ஏற்படுகின்றது.

இந்த இழப்புகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். மனித வன விலங்கு மோதலை தடுக்கவும், இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் வனத்துறை அமைச்சர் தலைமையில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வனத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல, நீர் மேலாண்மையில் தமிழகத்தில் புதிய திட்டம் துவங்க வேண்டும். பருவமழையின் போது ஆற்றுப்படுகைகளில் ஏற்படும் வெள்ளம் வீணாக கடலில் கலக்காமல் இருக்க, இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநகரத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது. தமிழக அரசு சார்பாக ஒன்றிய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் போன்றவற்றை விவசாயிகள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....