வனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் பொள்ளாச்சியில் கண்டன பொதுக்கூட்டம்.!!

வால்பாறை வனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் பொள்ளாச்சியில் கண்டன பொதுக்கூட்டம். வனச்சரகரை விடுவிக்காவிட்டால் வன ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை.


கோவை: வால்பாறை வனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் பொள்ளாச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. வனச்சரகரை விடுவிக்காவிட்டால் வன ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சிருகுன்றா வனப்பகுதியில் தங்கியிருந்த சில சுற்றுலாப் பயணிகளை வால்பாறை வனச்சரகர் ஜெயசந்திரன் தவறாக பேசியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை, உலாந்தி, பொள்ளாச்சி, மானம்பள்ளி, அமராவதி, உடுமலை, ஆகிய வனச்சரகங்களில் பணியாற்றும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இன்று பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.



இக்கூட்டத்தில் மாநில தலைவர் பேசுகையில், வனச்சரகர் மீது போடப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற்று உடனடியாக அவரை விடுதலை செய்து மீண்டும் அவரை அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும்.

வனச்சரகர் மீது பொய் புகார் கொடுத்த வால்பாறை குற்றவியல் நீதிமன்ற ஊழியரைப் பணி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு முறையில்லாமல் யாரும் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும், வனத்துறை ஊழியர்கள் யாரையும் விடுதி பணிக்காக நியமிக்கக் கூடாது.

அந்த பணிகளுக்குத் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும், மேலும் கைது செய்யப்பட்ட வால்பாறை வனச்சரகரை விடுவிக்கும் வரை அனைத்து வனத்துறை ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகப் பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....