கோவையில் பட்டதாரி வாலிபர் ஆன்லைன் மூலமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு பணத்தை பறிகொடுத்த பரிதாபம்..!

1.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த இணையதளம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் படித்து முடித்த பட்டதாரி வாலிபர் ஆன்லைன் மூலமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு, முதலீடு செய்த பணத்தை பறிகொடுத்த பரிதாபம் நடந்துள்ளது.

கோவை கணபதி, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த, 22 வயது கல்லுாரி மாணவர் ஆன்லைன் மூலம் பணம் முதலீடு செய்து, தொழில் செய்ய திட்டமிட்டார்.

இதனையடுத்து, இணையதளங்களை பார்த்தபோது ஆன்லைன் பொருட்கள் பெயரில், குறிப்பிட்ட அளவு பணம் முதலீடு செய்தால், அதற்கு தினமும் வருமானம் வரும் என்றும், முதலீடு செய்த தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்த மாணவர், நான்கு நாட்களாக ஆன்லைன் பொருட்கள் மீது, பணம் செலுத்தி வந்தார். இதில், அவருக்குக் குறிப்பிட்ட அளவு தொகை கிடைத்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 1.57 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், பல ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி, அந்த இணையதளத்தில், 1.57 லட்சம் ரூபாய் செலுத்தினார். செலுத்திய தொகை மீண்டும் வரவில்லை. பல வழிகளில் முயற்சித்தும் கிடைக்காததால், மாநகர சைபர் க்ரைம் போலீசில் மாணவர் புகார் அளித்தார். இது தொட‌ர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....