புகார் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைத் திருமணம் எங்கு நடந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் துறை சார்பாக செல் நம்பர் மற்றும் வாட்ஸ்அப் நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக 1098, 94981 81212, 77081 00100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், புகார் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உறவினர் மட்டுமல்ல, அருகாமையிலுள்ள யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் என அதில் கூறப்பட்டுள்ளது