கிணத்துக்கடவில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை..!

கோவை கிணத்துக்கடவில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவில் கோவை புறநகர் மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா எம்.ஆர்.பி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன்னதாக பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர், இனிப்புகள் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கணபதி நாராயணன், துணை செயலாளர் அருண் மனோகரன், கிணத்துக்கடவு கிளை அமைப்பாளர் கதிர்வேல், எம்.ஆர்.பி. திருமண மண்டபம் உரிமையாளர் தங்கவேல், பொள்ளாச்சி நகர பொருளாளர் நாதர்கான், பொள்ளாச்சி நகர துணைத்தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதி சுதாகர், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் வேலுசாமி, முன்னாள் செயலாளர் முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....