கோவை கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தத்தில் பயணியை இறக்காமல் அலைக்கழித்த தனியார் பேருந்தை மறித்து பொதுமக்கள் போராட்டம்..!

இனிமேல் பேருந்து இயக்கத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தத்தில் பயணியை இறக்காமல் அலைக்கழித்த தனியார் பேருந்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வரும் சிவசக்தி(42) என்பவர் நேற்றிரவு பொள்ளாச்சியில் தனியார் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

ஆனால், பேருந்து கிணத்துக்கடவு அருகே வரும் போது சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் மேம்பாலத்தில் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிணத்துக்கடவுக்கு டிக்கெட் வாங்கியுள்ளதாகவும் பேருந்தை கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தத்தில் நிற்குமாறு சிவசக்தி கேட்டுள்ளார்.

ஆனால், தனியார் பேருந்தின் ஓட்டுநர் கிணத்துக்கடவில் பேருந்து நிற்காது எனவும், கோவை சென்று திரும்பி வரும்போது தான் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் நிற்கும் என மரியாதை குறைவாக ஒருமையில் பேசி சிவசக்தியை இறக்கி விட்டுச் சென்றனர். இதனையடுத்து, இந்த தகவலை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சிவசக்தி தெரிவித்தார்.

பின்னர், அப்பகுதி மக்கள் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிறுத்தத்தில் கோவையில் இருந்து மீண்டும் வந்த அந்த தனியார் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து, போலீசார் நடந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் பேருந்து இயக்கத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...