பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - 6வன சரகங்களில் 13 க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் பங்கேற்பு.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு என மாமிச உண்ணி, தாவர உண்ணி விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் விலங்கு இடம் பெயர்ந்துள்ளாதா? அதிகரித்து உள்ளாதா? என ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது .

 

அதன்படி இந்தாண்டுக்கான குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலரந்தி, வால்பாறை, மானாம்பள்ளி , உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்களில் 124 நேர்கோட்டு பாதையில் 130 க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் தன்னாவாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில் நேற்று  காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனசரக பகுதியில் வனசரகர் ரவிசந்திரன் தலைமையில் போத்தமடை, சேத்துமடை, ஆழியார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணிகளும், அடுத்த 3 நாட்களுக்கு தாவர உண்ணிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தபடுகிறது. கணக்கெடுப்பின் போது நேர்கோட்டில் உள்ள வன விலங்குகளின் ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு விலங்கு களின் கால்தடம், எச்சம், நக கீறல்கல் உள்ளிட்டவை மூலம் கணக்கெடுக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த வனப்பகுதியில் உள்ள பினம் தின்னி கழுகுகளும் இதில் கணக்கெடுக்கபடுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லததால் வனப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை காரணமாக  பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ள காரணத்தால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விலங்குகள் தென்படாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...