வால்பாறை வனத்துறை தங்கும் விடுதியில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணியைத்தகாத வார்த்தையில், திட்டியதாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும், கூறி வால்பாறை வன சரகர் மீது 3- பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: வால்பாறை வனத்துறை தங்கும் விடுதியில், தங்கி இருந்த சுற்றுலாப் பயணியைத் தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறி, வால்பாறை வன சரகர் மீது 3-பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில், உள்ள தங்கும் விடுதியில், கடந்த சில நாட்களாகச் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தனர்.
கடந்த 21-ம் தேதி இரவு 7.30-மணி அளவில் அப்பகுதிக்கு ரோந்து வந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மதுபோதையில் அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளைத் தகாத வார்த்தையில் திட்டியதாகவும், அங்குத் தங்கி இருந்தவர்களை இரவு நேரத்தில் வனத்துறை தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வால்பாறையில் உள்ள மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நீதிமன்ற தலைமை கிளர்க் அளித்த புகாரின் பேரில் வால்பாறை காவல்துறை வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீது 3 பிரிவுகளில், FIR registered- Valparai ps Under section 294 B, 506 (1) of IPC and 4 (1) (j) of Tamil Nadu Prohibition ACT தகாத வார்த்தைகளால் திட்டுதல் கொலை மிரட்டல் 4(1)(j)(i) - Consumes or buys any liquor other than such liquor as may be specified by the State Government by notification in their behalf பணியின் போது மது அருந்தி இருத்தல் ஆகிய வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.

இதனை அறிந்த வனத்துறையினர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் அட்டகட்டியிலுள்ள சோதனைச்சாவடி முன்பு திரண்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் விடுதிக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த வனச்சரகர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் வெளியில் நடமாட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வனச்சரகர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
எஸ்டேட் பகுதியில், தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளையும் அழைத்து காவல்துறை விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டித்துப்பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.