கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க உதவும் 'ஓசோன் சானிடைசர்' மெஷின்கள்.!!

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க உதவும் 'ஓசோன் சானிடைசர்' மெஷின்கள்: அரசு மருத்துவமனை டீன் அலுவலகம், துளசி மருந்தகம், நகைக்கடைகள் உள்ளிட்டவற்றில் பயன்பாடு அதிகரித்துள்ளது.


கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி வரும் சூழலில், வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதுகாப்பாகத் தொழில் செய்ய 'ஓசோன் சனிடைசர்' மெஷின்கள் உதவுகின்றன.

மின்சாரத்தில் இயங்கும் இது போன்ற கருவிகளைத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக, வணிக நிறுவன வளாகங்களில் பயன்படுத்தினால் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ள காரணத்தால் இத்தகைய கருவிகளின் பயன்பாடு கோவை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

கோவை, தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:



கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து தரப்பு தொழில் துறையினரையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் போதும், நோய்த்தொற்று பரவல் குறித்த அச்ச உணர்வு உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

இதுமட்டுமின்றி எங்களைப் போன்று மக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற அச்ச உணர்வைத் தவிர்த்து நம்பிக்கையுடன் பாதுகாப்பாகத் தொழில் செய்ய உதவும் வகையில் ஓசோன் சானிடைசர் மெஷின்களை எங்கள் கடையில் செயல்படுத்தி வருகிறோம்.

மிகவும் சிறந்த பலனை இந்த கருவிகள் தருகின்றன. 'மேக் இன் இந்தியா' பொருட்களான இத்தகைய மெஷின்கள் 250-சதுர அடி நிலப்பரப்புக்கு ஒன்று என்ற வீதத்தில் பொருத்த வேண்டும். ஒரு கருவியின் விலை 16-ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



எங்கள் நகைக்கடையில் 2-இடங்களில் இந்த கருவிகளை வைத்து தினமும் பயன்படுத்தி வருகிறோம். இந்த கருவியின் பலனை நாங்கள் உணரத் துவங்கி உள்ளோம். கோவை மாவட்டத்தில் 650-நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25-சதவீத கடைகள் இந்த கருவியைப் பயன்படுத்தத் துவங்கி விட்டன.

கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் மற்றும் துளசி பார்மசி உள்ளிட்ட மற்ற பல இடங்களிலும் இத்தகைய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்று பரவலைத் தடுக்க உதவும். இத்தகைய கருவிகளை அலுவலகங்களில் பொருத்திச் செயல்பட்டால் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இந்த கருவிகளின் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து நாங்கள் இந்த கருவியை வாங்கி உள்ளோம். ரூம் சானிடைசர், டாய்லெட் சானிடைசர், உணவுகளுக்கான சானிடைசர் மெஷின் என பல்வேறு மாடல்களில் இந்த கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.



அதிக ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் நிறுவனங்களில் இத்தகைய மெஷின்களை பொருத்தினால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....