கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா வியாபாரம்: கோவை காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் புகார்.!!

கோவை காவல்துறையைக் கண்டித்து, மாவட்ட காவல்துறை ஆணையரைச் சந்தித்தும் இணை ஆணையாளரைச் சந்தித்தும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை காவல்துறையைக் கண்டித்து போலீஸ் கமிஷனர் உதவி ஆணையரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஒரு வீட்டில் சிறு வயது மைனர் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது. மைனர் பையன்களை வைத்து கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

தட்டிக்கேட்ட பகுதி மக்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அந்தப் பகுதி காணாமல் போன இருசக்கர வாகனங்களைத் திருடிய பையன்களைப் பிடித்துக் கொடுத்த, கடைவீதி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த சிலரை காவல்துறை இரவு 4:00 மணிக்கு வீட்டில் சென்று புகார் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளார்கள். திருடிய குற்றவாளிகளை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

மீண்டும் அதே இடத்தில் அதே விபச்சாரம் திருட்டு தொழில் நடைபெற்று வருகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பகுதிவாசிகள் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையரைச் சந்தித்தும் இணை ஆணையாளரைச் சந்தித்தும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார். அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவம் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு அவநம்பிக்கையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...