கோவையில் பேரன் வாயில் பிஸ்கெட் பேப்பரை திணித்து அடித்து கொலை செய்த கொடூர பாட்டி கைது.!!!

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பேரன் துருதுருவென அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பாட்டி அடித்து பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: பேரனை பிஸ்கெட் பேப்பரை வாயில் திணித்து அடித்து கொலை செய்த கொடூர பாட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆர்.எஸ். புரம் பகுதியில் வசிப்பவர் நித்தியானந்தம் அவர் சரவணம்பட்டி பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி 24, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். இளைய மகன் பெயர் துர்கேஷ் வயது 1 . இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மூத்த மகனை கணவனிடம் விட்டுவிட்டு இரண்டாவது மகன் துர்கேசை தூக்கிக்கொண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கே வந்துவிட்டார்.

பொருளாதார தேவை காரணமாக அவர் தாயின் கவனிப்பில் ஒரு வயது மகனை விட்டுவிட்டு தினம்தோறும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேளை விட்டு வீட்டிற்கு வந்தபொழுது இளைய மகன் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தான்.

பிறகு அவனை தூக்கி கொஞ்ச முயன்றபோது, அவன் வாயில் பிஸ்கட் பேப்பர்கள் துணிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ் புரம் போலீசார் வந்து விசாரணை செய்ததில் தன்னுடைய தாயின் கவனிப்பில் தான் தன்னுடைய குழந்தையை விட்டுவிட்டு தான் வேலைக்கு செல்வதாக தெரிவித்தார்.

தாயிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் துருதுருவென அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பாட்டி அடித்து பிஸ்கட் பேப்பர் துணியை திணித்து கொலை செய்ததாக கூறினார். நாக லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...