கோவை தெற்கு மண்டலப்பகுதிகளில் மேற்கொண்டு வரும் தூய்மைப்பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு நடத்திய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாகப் பணிபுரிய வேண்டும் என தூய்மைப்பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 100க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு நடத்தினார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த தூய்மைப்பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளைப் பார்த்த ஆணையர், அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் எனவும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும் எனவும் ஊழியர்களின் தெரிவித்தார்.
மேலும் பணியில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துப் பணியாற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கனார். இதோடு பொதுமக்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பைகளைக் கொட்டக் கூடாது எனவும் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை கொட்ட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வார்டு எண்.100க்குட்பட்ட செட்டிபாளையம் முதல் ஈச்சனாரி பிரிவு ரயில்வேகேட் அருகில் பாதாள சாக்கடை பணிகளுக்காக இணைப்புக்குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும்,

வார்டு எண்.97க்குட்பட்ட குறிச்சி, பிள்ளையார்புரம், கஸ்தூரி கார்டன் ஆகிய பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உடனடியாக மழைநீர் வடிகாலில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ரவிக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் ராமு, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.