கோவையில் மழையின் காரணமாகக் கணபதி, சரவணம்பட்டி பகுதியில் 6-மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் இருளில் மூழ்கினர்.
கோவை: கோவையில் மழையின் காரணமாகக் கணபதி, சரவணம்பட்டி பகுதியில் 6-மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் இருளில் மூழ்கினர்.
கோவையில் இன்று மதியம் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து கோவை கணபதி பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து மாலை ஆறரை மணிவரை மின்சாரம் வராமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது பலத்த காற்று காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ள காரணத்தினால் வேலை நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.
கோவை கணபதி பகுதி மற்றும் சரவணம்பட்டி முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியாகும். மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகும். தொடர்ந்து மக்கள் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கியபடி மின்சாரத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன. இதேபோல் மழை பெய்தால் உடனடியாக இந்த பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.