தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால்தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு; மத்திய அரசு உடனடியாக கைவிடக்கோரி கோவை அதிமுக எம்.எல்.ஏகள் கோரிக்கை!

தேங்காய் எண்ணைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம் எல் ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் இந்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாட்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தலைமையில் இன்று பழங்குடியின மற்றம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்தும் அதனைத்தடுப்பதற்காக உள்ள சட்டம் குறித்தும் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.



இதில் இதில் வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பழங்குடியினமக்களின மேம்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில், பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.



இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாட்சி ஜெயராமன், ஏற்கனவே தேங்காய் விலை சரிந்துக்கொண்டு வரும் நிலையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பாதிக்கும் வகையில், தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் கடந்தாண்டு கொப்பரை தேங்காய் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நூறு ரூபாய்க்கு கீழே விற்பனையாகி வருகிறது, இந்த நிலையில் விவசாயிகளைப் பாதிக்கும் இந்த வரி விதிப்பு கண்டனத்துக்குரியது எனவும் கொப்பரைக்கு ஆதார விலையாக தற்போது 105 வழங்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை போல கொப்பரைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு 125 ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதோடு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் வாய்க்கால்களை கடந்த ஆட்சியில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் வாய்க்கால்களை தமிழக அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...