75-வது சுதந்திரத் திருநாள் - கோவையில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி'.!!

கோவையில் தொழில்துறை அமைச்சகம் சார்பில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி' நடைப்பெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.



கோவை: 75-வது சுதந்திரத் திருநாள் - 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி' பி.ஆர்.நடராஜன் எம்பி துவக்கி வைத்தார்.



சர்வதேச வர்த்தக இயக்குனரகம் (Directorate general of foreign trade) மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தனர்.



இக்கண்காட்சியில், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைகள் அமைத்திருந்தனர்.



அவற்றைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் 'ஏற்றுமதியாளர் சங்கமம்' எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.

கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தொழில்துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று பயனடைகின்றனர்.



பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தென்னை நார் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....