கோவை மாவட்டத்தில் கோவிஷீல்டு எந்த முகாம்களிலும் கையிருப்பு இல்லை. இ.எஸ்.ஐ.,யில் கோவாக்சின் 2000 டோஸ் கோவாக்சின் கையிருப்பு உள்ளது. 2 ஆம் தவணை செலுத்த வருவோருக்கு முன்னுரிமை.
கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மொத்தம் உள்ள 1,080 படுக்கைகளில், 630 கொரோனாவுக்கும், 450 படுக்கைகள் இ.எஸ்.ஐ. அட்டைதாரர்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதால், கோவையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ரவிக்குமார் கூறுகையில், "மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி எந்த முகாம்களிலும் கையிருப்பு இல்லை. இ.எஸ்.ஐ.,யில் கோவாக்சின் 2000 டோஸ் கோவாக்சின் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,’’ என்றார்.