கிணத்துக்கடவில் வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ் அப் எண் வெளியீடு.!!

கிணத்துக்கடவில் வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளை பாதுகாக்கும் வகையில் தங்கள் முகவரியை தெரிவிக்க காவல்துறையினர் 94981-01181 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் மற்றும் அலுவலகம் செல்வோரின் வீடுகளைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறைக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் உங்கள் முகவரியைத் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் என்னை வெளியிட்டுள்ளது

அதன்படி பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சொல்லும்போது 94981-01181 என்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தங்கள் முகவரியை தெரிவிக்கலாம் என்றும், அப்போது அப்பகுதியில் அடிக்கடி காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வீடுகளை பாதுகாக்கும் பணி ஈடுபட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...