கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கூடுதலாக 25 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தம் - மருத்துவமனை முதல்வர் தகவல்..!

தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியில் செல்வதை தடுக்கவும், வார்டுக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், கூடுதலாக 25 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், உள்ளூர் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு, பழைய முடநீக்கியல் பிரிவு மற்றும் மஹாவீர் பில்டிங் ஆகிய மூன்று வார்டுகளில், கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.

அதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென 120 சாதாரண படுக்கைகள், 372 ஆக்ஸிஜன் படுக்கைகள், 68 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் மற்றும் அட்டெண்டர்களை கண்காணிக்க, கொரோனா வார்டுகளில் கூடுதலாக 25 சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மருத்துவமனையின் நுழைவாயில் முதல் முக்கிய பிரிவுகள் என பல்வேறு இடங்களில், 100க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி.,கேமராக்கள் உள்ளன. அதேசமயம், கொரோனா வார்டுகளில், இதற்கு 38 கேமராக்கள் இருந்தன. தற்போது, தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியில் செல்வதை தடுக்கவும், வார்டுக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களை கண்காணிக்கவும் இவை உதவும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....