தொடர்ந்து ஒரு வார காலமாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் தீடீரென பெய்த மழையால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவை: கோவையில் தொடர்ந்து ஒரு வார காலமாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் தீடீரென பெய்த மழையால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
தொடரும், வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து வந்த போதிலும், மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்த வந்தனர்.
இந்த நிலையில், இன்று ஒரு மணி அளவில் திடீரென கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கருமேகம் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.
மதியம் 2 மணியிலிருந்து தொடர்ந்து கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், கணபதி, சரவணம்பட்டி, ரத்தினபுரி, மணியகாரம்பாளையம், அவிநாசி ரோடு, சித்ரா ஏர்போர்ட், சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியதால், மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தாலும், அடித்து வந்த வெயிலுக்கு பெய்த மழையால் மக்கள் மனம் சிறிதேனும் குளிரிந்துள்ளது என்றே கூறவேண்டும்.