கோவையில் முக்கிய வீதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம்..!

உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவையில் முக்கிய வீதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.



கோவையில் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் தொடர்ந்து வீதிகளில் சாலை ஓரங்களில் மருத்துவ கழிவுகள், காலியான ஊசிகள் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.



அவை நாளடைவில் துர்நாற்றம் வீசத் தொடங்கி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக விரோதச் செயல் நடைபெற்று வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் மறைவில் நின்று மது குடிப்பது, மது பாட்டில்களை சாலையிலேயே போட்டு விட்டுச் செல்வது, முக்கிய வீதி போல் அல்லாமல் இது ஒரு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.



இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதியில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



தினம் தினம் அச்சப்பட்டு இந்த பகுதியில் வசித்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...