மது போதையில் கூலி தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூரைச்சேர்ந்த 29 வயதான ராமானுஜம் என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது குழந்தைக்குக் காது விழா நடத்தினார்.
நண்பர்கள் வீட்டு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பார்ட்டி இல்லாமல் இருக்கவே இருக்காது. அதுப்போல தான் ராமானுஜ வீட்டு விஷேசத்திலும் அவரது நண்பர்கள் மணிகண்டன், ஆனந்தராஜ், நவீன்குமார், சசி மோகன் ஆகிய 5 பேர் சேர்ந்து பார்ட்டியைக்கொண்டாடுவதற்காக அருகில் இருந்த டாஸ்மார்க் கடைக்குச் சென்றனர்.
பின்னர் மது போதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி பாபுஎன்பவர், ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்தார். மது போதையில் சென்ற 5 பேர், அவரிடம், மீண்டும் மது குடிப்பதற்கு, தண்ணீர் பாட்டில் கேட்டனர். ஆனால் பாபு கொடுக்க மறுத்ததால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இந்த ஐந்து பேரும் சேர்ந்து, பாபுவைச் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதோடு அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு 5 பேரை கைது செய்தனர். மேலும் இதுத்தொடர்பான வழக்கு கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் விசாரித்த நீதிபதி நாகராஜன், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும், ஆயுள் தண்டனை விதித்ததோடு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.