கோவை சி.ஐ.டி. கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - கல்லூரி மூடல்..!

18 வயதை கடந்த மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை சி.ஐ.டி. கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி மூடப்பட்டது.

கோவை அவினாசி சாலையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒரு மாணவி உள்பட 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் படிக்கும் 16 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,

கோவை மாநகராட்சியில் தினமும் 700 மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 18 வயதை கடந்த மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி நிலையங்களுக்கு சென்று வர வேண்டும். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....