கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 1219 இடங்கள், முதுகலை பாடப்பிரிவில் 383 இடங்கள் நிரப்பப்பட்டன..!

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வில் இளங்கலை பாடப்பிரிவில் 1219 இடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 383 இடங்களும் நிரப்பப்பட்டன.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 1219 இடங்களும் முதுகலை பாடப்பிரிவில் 383 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், அரசியல் மற்றும் பி.எஸ்சி. விலங்கியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், பி.காம் உள்பட 23 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தம் 1,433 இடங்களுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 26-ந் தேதி துவங்கியது.

முதல் நாளில் முன்னாள் படைவீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் மொத்தம் 1,114 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 319 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலி இடங்களுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நேற்று கல்லூரியில் நடைபெற்றது. இதில் 105 இடங்கள் நிரப்பப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 1219 இடங்கள் நிரப்பப்பட்டன.

இதேபோல், முதுகலை பாடப்பிரிவில் உள்ள 552 இடங்களுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்த நிலையில் 179 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலி இடங்களுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில் 10 இடங்கள் நிரப்பப்பட்டன. இதன் மூலம் முதுகலை பாடப்பிரிவில் மொத்தம் 383 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....