வால்பாறை நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணிகள் சிறப்பு முகாம்..!

வால்பாறை தபால் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள மழை நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை வால்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: வால்பாறை நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணிகள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி, வால்பாறை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.



இதன்படி, வால்பாறையில் உள்ள 21 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு 4 வார்டுகள் வீதம் 21 வார்டுகளில் உள்ள மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்தப்படுகிறது. மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து உள்ள செடிகளை வெட்டி அகற்றப்பட்டு நீர் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வால்பாறை தபால் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள மழை நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை வால்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.



இந்த சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் மழைக் காலங்களில் வெள்ளம் நேரங்களிலும் நகருக்குள் கழிவுநீர் தேங்குவது சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கலாம். பொதுமக்களும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் கழிவு நீர் வாய்க்காலில் வீசாமல் மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் தரவேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் சுகாதாரத்தைப் பேணி காப்பதோடு பெரும் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த பணிகள் நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், சுதாகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....