சசிகுமார் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி: ஆப்கானிஸ்தான் போன்ற நிலைமை இங்கும் வரும் - காட்டேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சசிகுமாரின் நினைவு தினத்தை இந்து அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.


கோவை: கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்த சி.சசிகுமார் என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கோவையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சசிகுமாரின் நினைவு தினத்தை இந்து அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.

அதன் படி, இன்று சசிகுமாரின் நான்காம் 4 ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இன்று காலை முதல் கோவையில் உள்ள அனைத்து இந்து முன்னணி கொடிக்கம்பங்கள் முன்பும் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து நினைவுஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது 250 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைப்பெற்றது.

இன்று மாலை, கோவை வி.கே.மேனன் சாலையில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.



கட்சியின் மாவட்டத் தலைவர் தசரதன் முன்னிலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், இந்து முன்னணி வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்துக்களை கிளப்பி விட்டு கலவரம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற நிலைமை இங்கும் வரும். பங்களாதேச இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நாடு கடத்த வேண்டும்.



சட்டவிரோதமாக திறக்கப்பட்ட பள்ளி வாசல்களில் தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கின்றனர். காவல்துறை இந்த அரசாங்கத்திற்குப் பணிந்து செல்கிறது. ஆளுநர் உளவு துறையை சேர்ந்தவர். ஆகவே, அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....