கோவை - கோவா இடையே 'இண்டிகோ' சார்பில் தினமும் நேரடி விமான சர்வீஸ் அக்டோபர் 31-முதல் துவக்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் துவக்கப்பட உள்ள இந்த சர்வீஸ் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.
கோவை: நோய்த்தொற்று பரவலுக்குப் பின் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவை - கோவா இடையே 'இண்டிகோ' சார்பில் தினமும் நேரடி விமான சர்வீஸ் அக்டோபர் 31-முதல் துவக்கப்படுகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பின் தினசரி விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நோய் தொடர் பரவலுக்கு முன் ஒரு நாளைக்கு 33-முதல் 35-விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நோய்த்தொற்று பரவலுக்குப் பின், மே மாதம் தினமும் 5-விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
தற்போது இந்த நிலை மாறி தினமும் சராசரியாக 15-விமானங்கள் மற்றும் அதற்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு 'இண்டிகோ' 'ஏர் இந்தியா' 'கோ ஏர்' 'ஸ்பைஸ்ஜெட்' உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 'இண்டிகோ' நிறுவனம் சார்பில் கோவை- கோவா இடையே நேரடி விமான போக்குவரத்து வசதி அக்டோபர் 31-முதல் துவக்கப்படுகிறது. இந்த செய்தி விமான பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ கோவை அலுவலகத்தின் அதிகாரிகள் கூறுகையில், "கோவை - கோவா இடையே நேரடி இடைநில்லா விமான சர்வீஸ் துவக்கப்படும் தகவல் உண்மைதான். டிக்கெட் புக்கிங் பணி துவக்கப்பட்டுள்ளது. 2021-அக்டோபர் 31-முதல் இந்த விமான சர்வீஸ் தினமும் வழங்கப்படும்.

கோவை விமான நிலையத்திலிருந்து இரவு 10:40-மணிக்கு புறப்பட்டு 12:05-மணிக்கு விமானம் கோவா சென்றடையும். மீண்டும் கோவாவிலிருந்து 12:55-மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1:55- மணிக்கு விமானம் கோவை வந்தடையும்."
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோய்த்தொற்று பரவலுக்குப் பின் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கோவை விமான நிலையத்தில் துவக்கப்பட உள்ள இந்த சர்வீஸ் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.