கோவை: கோவை மாவட்டம் பெரிய குயிலில் செம்மன், கிராவல்மண், கிராபைட் போன்ற கனிம வளங்களைத் திருடவந்த கேரளலாரியை அப்பகுதிமக்கள் ஒன்று கூடி விரட்டியடித்தனர். இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டுவதற்குத் தேவையான செம்மண், கிராபைட், கிராவல் மண் போன்ற கனிமவளங்கள் அதிகளவில் கிடைக்கிறது.
குறிப்பாக பெரியகுயிலி என்ற இடத்தில் அதிகளவில் கனிம வளங்கள் கிடைப்பதால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் அரசின் முறையான அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் லாரிகளின் மூலம் மணல்களை எடுத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைத்தடுப்பதற்கு பல முறை புகார் அளித்த நிலையில், கனிம வளத்துறை சார்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் முறைகேடாக கனிம வளங்களை எடுத்துச்செல்வது தொடர்கதையாக தான் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று வழக்கம் போல, பெரிய குயிலி பகுதியில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்கு கேரள மாநிலத்தைச்சேர்ந்த லாரி ஒன்று வந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து லாரியைச் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களிடம் மணல் எடுப்பதற்கான முறையான ஆவணம் எதுவும் உள்ளதா? என்பதுக்குறித்து விசாரணை நடத்தினர். அப்போதும் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்த லாரியை பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து விரட்டியத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பெரிய குயிலி பகுதியில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்கு எந்தவித ஆவணமும் இல்லாமல் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வருவதால் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.