பெரியநாயக்கன் பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை; சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் விசாரணை!

கோவை: கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு வீட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் அங்கிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு சின்னியம்பாளையம் பகுதியிலும் சொந்தமான வீடு ஒன்று இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடத்த தினத்தன்று அன்பழகனின் மனைவி பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்த வீட்டை பூட்டி விட்டு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டனர். இதனையடுத்து காலை மீண்டும் வீடு திரும்பிய நிலையில், அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க நகை பணம் டிவி கிரைண்டர் மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அன்பழகனின் மனைவி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார் . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விரைந்தனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்ததோடு இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....