ஈமு கோழி மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 2 கோடி அபராதம் விதித்து உத்தரவு!

சுசி ஈமு கோழி மோசடி வழக்கில் அதன் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 2 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் கோர்ட் இன்று பரப்பரப்பு தீர்ப்பளித்துள்ளது.


கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறைச்சேர்ந்த குரு என்ற குருசாமி கடந்த 2010 ஆம் ஆண்டு சுசி ஈமு பாம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத்தொடங்கி நடத்தி வந்தார்.

வாடிக்கையாளர்களைக்கவர வேண்டும் என்று நோக்கத்தில், பிரபல சினிமா நடிகர்களை வைத்து விளம்பரங்களை எடுத்ததோடு அதனை செய்திதாள்களையும் விளம்பரம் செய்தார். இதோடு கவர்ச்சிக்கரமானத் திட்டங்களையும் மேற்கொண்டிருந்தார். மேலும் பெருந்துறை அருகே ஈமு கோழி இறைச்சிக் கடைகளும் திறந்து அதன் மூலம் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.

குறிப்பாக சுசி ஈமு கோழி விற்பனையின் முதல் திட்டத்தில் ரூபாய் 1.50 லட்சம் பணம் முதலீடு செய்தால், ஈமு கோழி குஞ்சுகள் தீவனம் மருந்து மற்றும் பராமரிப்புப் பணமாக மாதம் ரூபாய் 6 ஆயரமும், ஆண்டு போனசாக 20 ஆயிரம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதோடு 2 ஆண்டுகள் கழித்து கட்டிய முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது திட்டமான விஐபி திட்டத்தில் ரூபாய் 1.50 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 7,000 போனஸ் என ஆண்டிற்கு ஆக வருடத்திற்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கட்டிய முழு பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என விளம்பரப்படுத்தினார்.

இந்த விளம்பரங்களை நம்பி கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் முதலீடு செய்த நிலையில் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் பேரில் நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருந்தப்போதும் இந்த மோசடி வழக்கின் விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, நீதிபதி ரவி ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் போது குற்றம் சாற்றப்பட்ட குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....