கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி குளிப்பதாக வந்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.
கோவை: வால்பாறையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத சுற்றுலா வாகனத்திற்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக வால்பாறைக்கு வருவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது சில தளர்வுகளுடன் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் படி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், வால்பாறையில் உள்ள ஆறுகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை அருகில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி குளிப்பதாக வந்த தகவலை அடுத்து உதவி ஆய்வாளர் முருகையா தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை சோதனையிட்டனர். சுற்றுலா வாகனத்தில் அளவுக்கதிகமான பயணிகளுடன் சமூக இடைவெளியின்றி பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்துக்கு காவல்துறையினர் ரூபாய் 500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதே போல், வால்பாறை நகரில் உதவி ஆய்வாளர் பாலாஜி தலைமையில் காவல்துறையினர் தலைக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.