இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்; கிணத்துக்கடவில் இந்து முன்னணியினர் மலர்தூவி மரியாதை!

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிக்குமாரின் 5 வது ஆண்டு நினைவுத்தினத்தை முன்னிட்டு கோவை கிணத்துக்கடவு பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் முன்னணியின் கோவை மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதனால் கோவை மாநகர் முழுவதும் கலவரமாக மாறிய நிலையில், இதுக்குறித்து சிபிசிஐடி போலீசார்கள் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இச்சம்பவம் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி சசிக்குமாரின் நினைவுத்தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.



அதன்படி இன்று இந்து முன்னணியின் கிணத்துக்கடவு ஒன்றியம் சார்பில் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.



கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த விழாவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சசிகுமாரின் திருவுருவப் படத்திற்கு சசிகுமாரின் தந்தையார் சின்னசாமி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில், கோவை கோட்டச் செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், செல்வகுமார், கோவிந்தராஜ் மற்றும் நகரச் செயலாளர்கள் மணிகண்டன், பெரியசாமி, பிரபு, ராமகிருஷ்ணன், மாதேஷ்,தனுஷ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....