கோவை எம்ஜிஆர் காய்கறி சந்தையில் முன்னறிவிப்பின்றி சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்து மாவட்ட வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தையில் முன்னறிவிப்பின்றி சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்து மாவட்ட வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்ட வியாபாரிகள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தையில் முன்னறிவிப்பின்றி சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகோவில் பகுதியிலுள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் 114 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிறு மற்றும் பெரு வணிகர்கள் 150 பேர் இச்சந்தையில் செயல்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்படுவர்.



இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் மற்றும் காய்கறி மூட்டைகளுக்கான சுங்க கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.



இதை சிறிதும் எதிர்ப்பாரத வியாபாரிகள், இதனை கண்டிக்கும் விதமாக இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டு, காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான நாராயணன் கூறியதாவது:

மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் செல்வம் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் விதிமுறைக்கு மாறாக அனைத்து வகையிலும் கூடுதல் கட்டணம் வசூலித்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும், ஆண்டுக்கு சுமார் 30 முதல் நாற்பது லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டினார்.

அதேபோல, காய்கறி மூட்டைகள் ஒவ்வொன்றிற்கும் 1 ரூபாய் 50 பைசாவென்று நீர்னியத்திருந்த நிலையில், கட்டணத்தை திடீரென 6 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளதாகவும் இரு சக்கர வாகனம் முதல் பத்து சக்கர லாரிகள் வரை அனைத்து வாகனங்களுக்கும் மூன்று மடங்கு சுங்க கட்டணத்தை உயர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், கடந்த முறையை விட 40 லட்சம் ரூபாய் குறைவாக ஒப்பந்தம் பெற்று பல மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்து மிகப்பெறும் மோசடியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....