காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கோவை: காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கிணத்துக்கடவில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 35-கிராம ஊராட்சி தலைவர்கள் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் கௌரவ தலைவர் சுந்தர் ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் பிரபு முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35-கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்த கொண்டு ஆலோசனை நடத்தினர்.
மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பொள்ளாச்சி- போத்தனூர் இடையே ரயில்கள் இயக்க வேண்டும், கிணத்துக்கடவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நத்தம் பகுதியில் வருவாய்த்துறையினர் நிலம் அளவீடு செய்யும் போது ஊராட்சிமன்றத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும்,
அதேபோல் கிராம ஊராட்சி பகுதிகளில் மின்சார பணிகள் நடைபெறும் போது மின்சார வாரியம் அதிகாரிகள் ஊராட்சி மன்றத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
பாராளுமன்றம் உறுப்பினர், சட்டமன்றம் உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்களின் நிதிகள் மூலம் பணிகள் நடைபெறும் போது ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

செக்போஸ்ட் பணிக்கு ஊராட்சி செயலாளர்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு செயலாளர் ஆனந்தி சண்முகம், பொருளாளர் சின்னு செயலாளர் ரத்தின சாமி உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.