ஊழியர்களின் பி.எஃப் தொகையில் முறைகேடா? அரசு தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் சார்பில் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களின் பி.எஃப் பணத்தை வேறு செயல்களுக்கு பயன்படுத்துவதாக தகவல்கள் வரும் நிலையில் இதுக்குறித்து தமிழக அரசு தலையீட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அமைப்பினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


கோவை: வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு கோவையைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பான சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் சமீப காலங்களாக அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகை அவர்களின் கணக்கில் முறையாக செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு நிலவுகிறது. இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது மிகவும் முறைகேடான விஷயம் எனவும், வருங்கால வைப்பு நிதி ஒன்று மட்டும் தான் எதிர்காலத்தில் ஊழியர்களின் பணத்தேவைகளை நிவர்த்தி செய்கிறது. மேலும் குழந்தைகளின் திருமணம், மேற்படிப்பு மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு ஊழியர்கள் இந்த பணத்தை நம்பி தான் உள்ளனர்.

ஆனால் இந்த தொகைகள் சில அலுவலர்களால் சரியாக ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படுவதில்லை மற்றும் அதனை வேறு காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் வரும் செய்தி மிகவும் அதிர்ச்சித் தரக்கூடியதாக உள்ளது. மேலும் இது தொடர்பாக சமீபத்தில் திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர்கள் சுமார் ஆயிரம் பேர் ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதேபோல் கோவை மாநகராட்சியிலும் தவறுகள் நடப்பதாக அறிகிறோம்‌. இது தொடர்பாக எங்கள் சார்பாக பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் மாநகராட்சியில் இருந்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதேபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் கையிருப்பில் உள்ள விடுப்பிற்கான தொகை மற்றும் பென்ஷன் ஆகியவை சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. எனவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு கண்டுகொள்ளாவிடில் தமிழக அரசிற்கு அவப்யெர் தான் ஏற்படும் எனவே பிஎஃப் பணத்தைக்கொண்டு முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பதுக்குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....