வால்பாறையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனி..!

சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனி நன்கொடையாக வழங்கியுள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனி வழங்கியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல்முடி, முருகாளி, கல்யாண பந்தல், பாரளை, அய்யர்பாடி ஆகிய ஐந்து தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல் முடி குரூப் சார்பில் சோலையாறு அணை பகுதியில் உள்ள சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டில், பீரோ, மெத்தை, அலுவலகத்திற்கு தேவையான பிரிண்டர், டேபிள், சேர், எடை பார்க்கும் கருவி, குளுக்கோ லேப் மெஷின், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வால்பாறையில் உள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேக்கல் முடி குரூப் பொதுமேலாளர் கே பாலாஜி, உதவி பொது மேலாளர் போப்பி, P & I R மேலாளர் முருகாளி டேவிட்கிங்ஸ்லே, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் அவர்களிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....