வால்பாறை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவருக்கு பாராட்டு விழா..!

வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பொறுப்பேற்றிருக்கும் நவரத்தின ராஜா அவர்களுக்கு வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பொறுப்பேற்றிருக்கும் நவரத்தின ராஜா அவர்களை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக இன்று அரசு மருத்துவமனையில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகிகள் பேசுகையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நமது அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜா அவர்கள் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், அவர் சமீப காலங்களில் வால்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நோயாளிகளை தனது சிறப்பான பணியால் வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே அந்த நோயாளிகளுக்கு திறமையாக அறுவை சிகிச்சை செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.

மேலும், அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராகப் பொறுப்பேற்றிருப்பது வால்பாறை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இதை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் இயக்கம் சார்பாக அவரது சேவை மேலும் தொடர பாராட்டு விழா நடைபெற்றதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...