ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை: ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வந்த ஆன்லைன் நிதி நிறுவனம், டிபாசிட் தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரப்படுத்தினர். இதை நம்பி, 86 பேர் பேர் 4.96 கோடி டிபாசிட் செய்தனர்.
ஆனால், டிபாசிட் பணத்தை திருப்பி தராமல், மோசடி செய்ததால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். நிறுவன பங்குதாரர்கள், திண்டுக்கல் சின்னாளபட்டியை சேர்ந்த ராஜா (36), ஓசூரைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோர் 2010 -ல் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இவர்கள் மீது கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. புகழேந்திக்கு, கடந்த ஜூன் 31ம் தேதி 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு, 10 ஆண்டு சிறை, 2.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.