தனியாகச் சென்று கஞ்சா வியாபாரியைக் கைது செய்த காவலருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: தனியாகச் சென்று கஞ்சா வியாபாரியைக் கைது செய்த காவலருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று (20.09.2021) செங்க துறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரைக் காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன் வசம் ஒப்படைத்தார்.
இது சம்பந்தமாகக் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து மணிகண்டனைச் சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கில் குற்றவாளியை பிடிக்கத் திறம்படச் செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இன்று (21.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.