கிணத்துக்கடவு அருகே தாய்-தந்தைக்கு கொலைமிரட்டல் விடுத்த மகன் கைது.!!

ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற மகன் கதவைத் தட்டி தாய், தந்தை இருவரையும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாய்-தந்தைக்குக் கொலைமிரட்டல் விடுத்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி வயது (73) கூலி தொழிலாளி. இவருக்கு செல்வராஜ் (43) என்ற மகனும், முத்துலட்சுமி (33) என்ற மகளும் உள்ளனர்.

செல்வராஜ் திருமணமாகி அதே ஊரில் வசித்து தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தினசரி குடித்துவிட்டு தந்தை மாகாளி மற்றும் தாய் சரசாள்(60) ஆகிய 2 பேரையும் அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தந்தை மாகாளி வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற செல்வராஜ் கதவைத் தட்டி தாய், தந்தை இருவரையும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தந்தை மாகாளி கொடுத்த புகாரின் பேரில் கிணத்துகடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகன் செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...