அய்யோ… கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை காணோம்: கிணத்துக்கடவில் மர்ம நபர்கள் கைவரிசை.!!

கிணத்துக்கடவில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவில் இருவேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 59 ஆயிரத்து 600 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(30), இவர் பழைய செக்போஸ்ட் பகுதியில் பாத்திர கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வழக்கம் போல் இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்த அருண்குமார் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 59-ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் சங்கரன்(42) என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.

இவரும் இன்று காலை வழக்கம் போல் மருந்துக் கடையைத் திறக்க வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையிலிருந்ததை கண்டு கடையைத் திறந்து பார்த்தபோது கல்லாப் பெட்டியிலிருந்த 600-ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் வந்து சோதனை செய்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...