மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம், 144 தடை உத்தரவை மீறி நடத்தியதாக திமுகவினரைச் சேர்ந்த 250 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: மத்தியில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது போன்றவை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு தொடர்ச்சி முயற்சித்துவருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கோவையைப் பொறுத்தவரை மாநகர் காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் தடை உத்தரவை மீறி நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 250 பேர் 144 தடை உத்தரவை மீறுதல் மற்றும் தொற்று நோய் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.