கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அருகே வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பல்வேறு நல உதவிகளைப் பெற அனைத்து வேலை நாட்களிலும் மாற்றுத்திறனாளிகள் பலர் வந்து செல்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் பலர் நல உதவி பெற விண்ணப்பிக்க ஆவணங்கள் நகல் எடுப்பது தங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஸ்டேட் பாங்க் ரோடு சுற்றுப்புற பகுதிகளில் சென்று ஜெராக்ஸ் மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலோ அல்லது ரோட்டரி கிளப் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஜெராக்ஸ் கடை மற்றும் உடனடி போட்டோ எடுத்து வழங்கும் கடை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே அமைத்துத்தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அரசு உதவி பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் கொண்டுவரும் பட்சத்திலும் சில நேரங்களில் ஜெராக்ஸ் மற்றும் கூடுதல் புகைப்படங்கள் தேவைப்படும். ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே வந்தபின் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.
மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில்,
"ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அரசின் நல உதவிகளைப் பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள் ஜெராக்ஸ் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு வசதி இல்லாமல் சிரமப்படுவது தொடர்கதையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் அவர்களுக்குத் தேவையான வசதியை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.