கோவை மாநகராட்சி துணை கமிஷனராக ஷர்மிளா நியமனம்; முன்னதாக இருந்த துணை கமிஷனர் நெல்லை சிப்காட் பிரிவுக்கு மாற்றம்!

கோவை மாநகராட்சியின் பொறுப்பு துணை ஆணையராக பதவி வகித்த விமல்ராஜ் சில நிர்வாக காரணங்களால் நெல்லைக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய கோவை துணை ஆணையராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக அரசு தலைமைச்செயலாளர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி துணை ஆணையர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வகித்த விமல்ராஜ் என்பவர் நிர்வாக காரணங்களால் கடந்த 17 ஆம் தேதி அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் சென்னையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொதுமேலாளராக மருத்துவர் ஷர்மிளா கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த விமல்ராஜ் திருநெல்வேலி, சிப்காட் பிரிவு, சூரிய மின்சக்தி கலன் அமைப்பின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதோடு கோவை மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைத்தாள்) நர்மதாதேவி, சென்னை, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் பொதுமேலாளராகவும், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) டி.ஆர்.டி.சாந்தி மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகப் பணியாற்றி வந்த குமரேஸ்வரன், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மண்டல மேலாளர் பிரசன்னராமசாமி, சென்னை பெருநகரம் வருவாய் அலுவலர்( நிலம் மற்றும் எஸ்டேட்) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்( நிலம் எடுப்பு) பொறுப்பு வகித்த அசோகன், கள்ளக்குறிச்சி, கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் மேலாண்மை இயக்குநராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...