கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்றுவரும் தூய்மைப்பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்தார். இதோடு மழைநீர் வடிகால்கால்வாயை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் மாபெரும் தூய்மைப்பணி முகாம் நேற்று முதல் துவங்கியது.
இதில் மழைநீர் வடிகால்வாயைச்சுத்தம் செய்வது, கால்வாய் தூர்வாருவது போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக கோவை மாநகராட்சியைப்பொறுத்தவரை 100 வார்டுகளில் நேற்று முதல் தூய்மைப்பணி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் சுமார் 37 கிமீ தூரத்திற்கு சுத்தம் செய்யும் பணிகளில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 55க்கு உட்பட்ட லட்சுமி மில் எதிரில், மாபெரும் தூய்மைப்பணி முகாமை இன்று கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அப்போது ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.