கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சுமார் 36 கிமீ தூரத்திற்கு நடைபெற்றுவரும் தூய்மைப்பணி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதோடு மக்களைத்தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நேற்று முதல் தூய்மைப்பணி முகாம் நடைபெற்றுவருகிறது.
இரண்டாவது நாளான இன்று 11வது வாரடுக்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூர் பகுதியில் சுமார் 600 மீட்டார் தாரத்திற்கு மழைநார் வடிகால் கால்வாய்களில் குப்பைகளை முற்றிலுமாக அகற்றி தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதனைத்துவங்கி வைத்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் என்பதன் கீழ், அனைத்து இடங்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிகாலில் சீராக செல்வதற்கு ஏதுவாக அனைத்து மழைநீர் வடிகால் பகுதிகளும் சீரமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். இவ்வாறு மேற்கொள்ளும் போது மழைக்காலங்களில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதைத்தடுக்கவும், டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப்பாதுகாக்க பேருதவியாக இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதோடு இதுவரை தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் 5லட்சத்து 99 ஆயிரத்து 167 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதில் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 2லட்சத்து 63 ஆயிரத்து 361 நபா்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 1 லட்சத்து 74 ஆயிரத்து 855 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்கள் 121233 அடங்குவார்கள் எனக்கூறியுள்ளார். குறிப்பாக கோயம்புத்தார் மாவட்டத்தில் இரத்த கொதிப்பு உள்ளவர்கள் 7775 நபர்களும், சாக்கரை நோய் பயனாளிகள் 3270 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்கள் 3706 நபர்களும் பயன்பெற்றுள்ளார் எனவும் கோயம்புத்தூார் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் இரத்த கொதிப்பு உள்ளவர்கள் 2550 நபர்களும், சாக்கரை நோய் உள்ளர்வகள் 1456 நபர்களும், இரண்டு இணை நோய் உள்ளவர்களும் 1767 நபர்களும், சிறுநீரக நோய் பாதித்த பயனாளிகள் 3 நபர்களும் பயனடைந்துள்ளார்கள்.”

என தெரிவித்த வனத்துறை அமைச்சா் அவர்கள் அப்பகுதியில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலா் மரு.சதீஷ்குமார, உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகா, மண்டல உதவி ஆணையாளர் திரு.சிவசுப்பிரமணியம், செயற்பொறியாளர் திருமதி.பார்வதி, உதவி செயற்பொறியாளாகள், மண்டல சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளாகள், பணி மேற்பாவையாளாகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.