வால்பாறையில் பள்ளிக்கூட ஜன்னல் கதவுகளை இடித்து 5-காட்டு யானைகள் சூறையாடி உள்ளன.
வால்பாறை: வால்பாறையில் பள்ளிக்கூட ஜன்னல் கதவுகளை இடித்து காட்டு யானைகள் சூறையாடி உள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறையில் பல மாதங்களாகக் காட்டு யானைகள் தொந்தரவு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மழை ஓய்ந்து வெயில் அடிக்கும் காரணத்தினால் வனப்பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி உள்ளன.
கொசுத் தொல்லைகள் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தேயிலைத் தோட்ட பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன. தேயிலைத் தோட்டத்தில் உலா வரும் காட்டு யானைகள் உணவு தேடி தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள் அங்குள்ள பள்ளிக்கூடம் சத்துணவு கூடம் நியாயவிலைக்கடை மளிகைக் கடை தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் இடித்துச் சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ளது காஞ்ச மலை தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் வடக்குப் பிரிவில் அமைந்துள்ளது.

அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5-காட்டு யானைகள் இந்தப் பள்ளியின் முன் கதவு ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியது.

யானைகள் வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட காவலர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று யானையை விரட்டி அடித்தனர். காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீமுட்டிக் காவல் காத்தனர்.
மேலும், தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானை களை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டினர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.