கிணத்துக்கடவு அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி ஊராட்சி மன்ற தலைவராக முன்னாள் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ணசாமியின் மனைவி பூபதி உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து உறுப்பினர்களை கூட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கிராமத்தில் மின் மயானம் சீர் செய்யாமல் புதர் மண்டி உள்ளது, சாலைவசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.



இந்த நிலையில், பொதுமக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு அதிகாரிகள் உதவியுடன் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறி, ஊராட்சிமன்ற தலைவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ், திமுக கிணத்துக்கடவு வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிரிகதிர்வேல், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பனப்பட்டி வேலுமணி, அரசம்பாளையம் சின்னு, ஒன்றிய குழு உறுப்பினர் மகேந்திரன் உட்பட திமுக மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...