சிறுமுகையில் புலி இறப்பிற்கானக் காரணம் ஆய்வின் முடிவில் நிச்சயம் தெரியும்- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்!

சிறுமுகை வனப்பகுதியில் புலி இறப்பிற்கானக் காரணம் குறித்து ஆய்வு நடைபெற்றுவருவதாகவும், விரைவில் என்ன காரணம் என்பது தெரிய வரும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலணிப் பகுதிகளில் மாநகராட்சி சார்பின் மூலம் நடத்தப்படும் தூய்மைப்பணி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்.



இதனையடுத்துக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் குறைச்சொல்லமுடியாத அளவிற்கு திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாக் கூறியுள்ளார். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்பது வரவேற்கத்தக்க ஒன்று என தெரிவித்துள்ளார்.



இதோடு தமிழகம் முழுவதும் மழைக்காலத்திற்கு முன்னதாக அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர்க்கால்வாய் சீரமைக்கும் பணிகளை அந்தத்த மாநகராட்சிகள் மேற்கொண்டுவருவதாகக் கூறினார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும், தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் விரைவில் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நிறைவடையும் என கூறியுள்ளார். இதோடு தமிழக வன எல்லைகளில் கான்கீரிட் சுவர் போடும் திட்டத்திற்கு மார்ச் மாதத்திற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும் எனவும், இதன் மூலம் வனப்பகுதியை விட்டு யானை, பன்றி, மான்கள் போன்றவை குடியிருப்பு பகுதிக்குள் வரவாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என தெரிவித்த அமைச்சர், இறப்பிற்கான காரணம் ஆய்வின் முடிவில் தெரியவரும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...